காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (23.07.2025) | ThanthiTV

x
  • திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய ஆய்வகம் திறப்பு...லட்டு பிரசாதம், குடிநீர், நெய் உள்ளிட்டவை சோதிக்கப்படும் என அறிவிப்பு...
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும்மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு....
  • ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கருப்பு திரைப்படம்...அனல் பறக்கும் டீசர் வெளியான நிலையில், இணையத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்...
  • கோவையில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை...காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழத்தை பறிமுதல் செய்து அதிரடி...
  • சென்னை பரங்கிமலையில் 7 வயது மகளை கொன்ற தந்தை மீது கொலை வழக்குப்பதிவு...
  • சென்னை குரோம்பேட்டையில் பலத்த சப்தத்துடன் வெடித்த டிரான்ஸ்பார்மர்...மளமளவென பற்றி எரிந்த நெருப்பு... கரும்புகை வெளியேறியதால் மக்கள் அச்சம்...
  • நெல்லை மாவட்ட வீரவநல்லூரில் ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்த விவகாரம்...5 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு...
  • கார் விபத்து குறித்து மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு...விசாரணைக்கு ஒத்துழைக்காததால் மதுரை ஆதீனத்தின் முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...
  • கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி மாநகர பேருந்து மீதி மோதி ஏடிஎம்மில் புகுந்து விபத்து...ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த திமுக வார்டு செயலாளர் உடல் நசுங்கி உயிரிழப்பு...
  • கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தொடர்ந்து உயரும் தக்காளி விலை...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்வு...சவரனுக்கு 760 ரூபாய் உயர்வு...கடந்த 2 நாட்களில் மட்டும் ஆயிரத்து 600 ரூபாய் விலை ஏற்றம் கண்ட நிலையில், சவரன் 75 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை...
  • தனிநபர் வருமானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு 2 இடத்தை பிடித்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...

Next Story

மேலும் செய்திகள்