மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.07.2025) | ThanthiTV
• கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தொடர்ந்து உயரும் தக்காளி விலை...
• கூடுவாஞ்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய டிப்பர் லாரி மாநகர பேருந்து மீதி மோதி ஏடிஎம்மில் புகுந்து விபத்து...ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த திமுக வார்டு செயலாளர் உடல் நசுங்கி உயிரிழப்பு...
• கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நபர்...சந்தேகத்தின் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் உத்தரப்பிரதேச இளைஞரிடம் போலீஸ் விசாரணை...
• வியட்னாமில் வலுவிழந்து வங்கக் கடலை அடைய உள்ள விபா புயல்...அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...
• சென்னை ஏழுகிணறு பகுதியில் வீட்டின் 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது குழந்தை...படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி...
• சென்னை பரங்கிமலையில் 6 வயது மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...
• சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்வு...
• உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகள் குறித்து குமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு...
• நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்...
• நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு...இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளி...
• மு.க.முத்துவின் மரணம், அடுத்தடுத்த பணிகளால் முதலமைச்சர் சற்று களைப்படைந்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...
• தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்...கூட்டணி மந்திரி சபை அமையும் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நம்பிக்கை...
• தஞ்சாவூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...விவசாயிகள், வணிகர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை...
• தனிநபர் வருமானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு 2 இடத்தை பிடித்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...
