காலை 11 மணி தலைப்பு செய்திகள் (21-07-2025) || Thanthi TV

x
  • இலவச வீட்டு மனை பட்டாவை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது...மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு...
  • புதுச்சேரியில் நகை வியாபாரியிடம் தங்கத்திற்கு பதிலாக செப்பு கட்டிகளை கொடுத்து மோசடி...ஏமாற்றி 880 கிராம் தங்க நகைகளை வாங்கிச்சென்ற ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு...
  • சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ஒரேநாளில் 15 ரூபாய் உயர்வு...
  • தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியில் நள்ளிரவில் சுற்றித்திரிந்த கொள்ளையர்கள் கைது...
  • நெல்லை, வீரவநல்லூர் தனியார் பள்ளி 10ம் வகுப்பு மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம்...பள்ளி பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு...
  • கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் புதிய வீடியோவை வெளியிட்ட காவல்துறை...
  • கர்நாடகாவில் 100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்...பலர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவு...
  • கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிடாத விவகாரம்...மாநிலங்களவை வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த கோரி திமுக எம்.பி திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ்....
  • அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்...
  • தடம் புரண்ட அதிமுக, பாஜக கையில் சேர்ந்துள்ளது...பாஜக எந்த கூட்டணியில் சேர்கிறதோ அந்த கூட்டணியை அழித்து விடுவார்கள் எனவும் அன்வர் ராஜா விமர்சனம்...
  • 2006-ல் 189 பேர் உயிரிழப்புக்கு காரணமான மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவம்....குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு...
  • காங்கிரஸ் ஆட்சியில் 1 ரூபாய் ஒதுக்கப்பட்டால் 15 பைசாதான் மக்களை சென்றடைந்தது...மக்கள் பணம் மக்களுக்கே என்பதே பாஜக ஆட்சியின் நோக்கம் எனவும் பிரதமர் மோடி கருத்து...
  • நம் ராணுவத்தின் 100 சதவீத வெற்றியை ஆபரேஷன் சிந்தூர் பறைசாற்றுகிறது எனவும் பிரதமர் மோடி புகழாரம்...
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என நம்புவதாக பிரதமர் மோடி பேட்டி...

Next Story

மேலும் செய்திகள்