காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2025) |Thanthi TV
- மதுரையில் வரதட்சணை புகாரில் சிக்கிய போலீஸ் பூபாலனுக்கு வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல்...
- கார் பறிக்கப்பட்ட விவகாரத்தில், உயர் அதிகாரிகளை குற்றம் சாட்டிய மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்....
- ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் சிகிச்சை தவிர மற்ற அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள தடை...
- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் பகீர் கிளப்பியுள்ள கிட்னி விற்பனை விவகாரத்தில் மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பு...
- கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்..வழக்கில் தொடர்புடைய வடமாநில இளைஞர் புறநகர் ரயிலில் பயணம் செய்யும் புதிய படம் வெளியீடு...
- கும்மிடிபூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்...பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பேட்டி....
- ஆடி கிருத்திகையை ஒட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்...
- நடப்பு ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை...திறக்கப்படும் தண்ணீரின் அளவு 31 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
- நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு....
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் அரசியல் சூழல் தொடர்பாக, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை...
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியுமா?குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான மனுவை ஜூலை 22ஆம் தேதி விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்...
- இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது, ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு தகவல்...
- 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறியது பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்...நாட்டு மக்களுக்கு தெரிந்துகொள்ள உரிமை உள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவு...
- அமெரிக்காவில் போயிங் ரக விமானத்தில் நடுவானில் தீப்பிடித்ததால் பரபரப்பு...
Next Story
