காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2025) | Thanthi TV

x
  • திருவண்ணாமலையில் பிரபல திரைப்பட நடிகர் பாபி சிம்ஹா கிரிவலம்...
  • திட்டக்குடியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஒரு குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து சீல் வைத்ததாக குற்றச்சாட்டு...
  • சென்னை திருவான்மியூரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த முன்னாள் காதலன்...ஆபாச புகைப்படம் வைத்திருப்பதாக கூறி நகை, பணம் பறித்த நிலையில், 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்த மகளிர் போலீஸ்...
  • நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் பகீர் கிளப்பியுள்ள கிட்னி விற்பனை விவகாரத்தில் மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பு...
  • கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்த நாளன்று அப்பகுதியில் பதிவான 600 செல்போன் அழைப்புகள்...ஒரு காவல் உதவி ஆய்வாளருக்கு 100 செல்போன் அழைப்புகள் என எண்கள் பிரித்து கொடுக்கப்பட்டு விசாரணை தீவிரம்...
  • கும்மிடிபூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்...பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பேட்டி....
  • கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை குத்திக் கொன்ற கணவன்...
  • கார் விபத்து குறித்து பேசியதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு...மதுரை ஆதினத்திடம் விசாரணை செய்வதற்காக சைபர் கிரைம் போலீசார் வருகை...
  • 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறியது பற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்...நாட்டு மக்களுக்கு தெரிந்துகொள்ள உரிமை உள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிவு...
  • ஆடி கிருத்திகையை ஒட்டி பழனி கோவிலில் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்...
  • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை....குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை...
  • நடப்பு ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை...திறக்கப்படும் தண்ணீரின் அளவு 31 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
  • தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு...சென்னை, குமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல்...

Next Story

மேலும் செய்திகள்