மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (20.07.2025) | 1 PM Headlines | Thanthi TV
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை....குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை...
- நைஜர் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழப்பு...
- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் பகீர் கிளப்பியுள்ள கிட்னி விற்பனை விவகாரத்தில் மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பு...
- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்...
- காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு காதலன் தப்பியோட்டம்...
- கார் விபத்து குறித்து பேசியதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு...மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணை நிறைவு...
- பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவிப்பு...
- 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் பாமகவினர் போராட்டம்...
- தமது வீட்டில் இருந்த ஒட்டு கேட்கும் கருவி குறித்து தனியார் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி...
- 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்...திமுக இளைஞரணி தொடக்க நாளை ஒட்டி, தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு...
- திருப்பூர் மாவட்டத்தில் வரும் 22 மற்றும் 23ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின்...
- நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம்...
Next Story
