காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) | Thanthi TV

x
  • அனைத்து நீதிமன்றங்களிலும் கழிவறை அமைக்கும் உத்தரவை பின்பற்றுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணை....20 உயர்நீதிமன்றங்களுக்கு 8 வாரம் கெடு விதித்தது உச்சநீதிமன்றம்....
  • மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்...கடந்த 2 தினங்களாக மழை நீடித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடிவு...
  • உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர் மழையால் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்வு...சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நமோ காட் பகுதியை சூழ்ந்தது வெள்ளம்...
  • பஞ்சாப் மாநிலத்தில் சொத்து தகராறில் சொந்த சகோதரன் மீது காரை ஏற்றிய நபர்...அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு... சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் காவல்துறை...
  • பீகாரில் உள்ள பராஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரோல் கைதி மீது துப்பாக்கிச் சூடு...அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் பீகார் காவல்துறை...
  • நவீன காலத்திலும் சில நடைமுறைகள் இன்னும் மாறவில்லை....பலரது மனதில் இருக்கும் சாதிய வன்மங்களை அகற்றுவது எளிதல்ல என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கருத்து...
  • நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீ...இன்று மாலைக்குள் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்படும் என தீயணைப்புத்துறை உறுதி...
  • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற போது மோதிக் கொண்ட பைக்குகள்...பெண் உள்பட மூவர் காயம்... விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவுகள்...நீர் மாசு அடைந்து விளைநிலம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை....
  • குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ‘ஸ்ட்ரெச்சர் இல்லாததால் நோயாளிகள் அவதி....வலியால் துடித்த நோயாளியை கையில் தூக்கிச் சென்ற உறவினர்கள்...
  • ஆதவ் அர்ஜுனா மிரட்டல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பிய காவல்துறை...மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவு...
  • பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக மும்பையில் அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக புகார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்யாமல் சம்மன் கொடுத்து சென்ற மும்பை போலீஸ்...
  • பாலியல் புகாரில் நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவி விவகாரம்...ஒடிசாவில் முழு கடையடைப்பு போராட்டம்... எதிர்கட்சிகள் பேரணி...
  • பீகாரில் 2025 ஆகஸ்ட் முதல் வீட்டு நுகர்வோருக்கு மாதம் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்...1.67 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு
  • நவீன காலத்திலும் சில நடைமுறைகள் இன்னும் மாறவில்லை....பலரது மனதில் இருக்கும் சாதிய வன்மங்களை அகற்றுவது எளிதல்ல என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கருத்து...
  • தி.மு.க கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி வீக்காக உள்ளார்...எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்....
  • பொறியியல் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கான முதல் கட்ட முடிவுகள் வெளியீடு...36 ஆயிரத்து 731 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாணவர் சேர்க்கை குழு விளக்கம்...
  • முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை, பரப்புரை இயக்கம் தொடர்பாக ஆலோசனை...

Next Story

மேலும் செய்திகள்