மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.07.2025) | Thanthi TV
- சென்னை அயப்பாக்கத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணபிக்க ஒரே நேரத்தில் குவிந்த கூட்டம்....
- ஆதவ் அர்ஜுனா மிரட்டல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பிய காவல்துறை...
- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்..
- தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு...பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்
- தி.மு.க கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி வீக்காக உள்ளார்...எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்....
- பாஜகவும், அதிமுகவும் தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள அநீதியை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்...அடுத்த 30 நாட்களில் 2.5 கோடி பேரை உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என தி.மு.க மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்....
- தமிழகத்தின் 13 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை படிப்பிற்கான இடங்கள் அதிகரிப்பு....எம்.டி மற்றும் எம்.எஸ் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 488 இடங்கள்
- தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எதிரான வழக்கில் கட்சி தலைவர் விஜய்க்கு நோட்டீஸ்...சிகப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....
- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
- விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை....
- திருச்சி சிவாவின் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது...
- காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம்....
- காமராஜரை இழிவுபடுத்த நினைப்பது கண்டிக்கத்தக்கது...திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம்...
- காமராஜர் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு ஒரு சதவீதம் கூட உரிமை கிடையாது...தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேச்சுக்கு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை காட்டம்...
- காமராஜர் பற்றிய சர்ச்சைக்குரிய மற்றும் வீண் விவாதங்களை தவிர்ப்போம்...கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்...
Next Story
