காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (16.07.2025) | Thanthi TV
- உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்த கார்...
- கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணி நீக்கம்...விசாரணையில் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை மூடாதது தான் விபத்துக்கு காரணம் என உறுதி...
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில், சென்னையில் ஒரே நாளில் 10 ஆயிரம் மனுக்களை வழங்கிய பொதுமக்கள்...
- சளியால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தைக்கு தைலம் மற்றும் கற்பூரத்தை குழைத்து மூக்கில் தேய்த்ததால் மூச்சுத்திணறல்...எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழப்பு...
- திருவண்ணாமலை அருகே வினோத விலங்கு நடமாடுவதாக பகிரப்பட்ட புகைப்படங்கள்...2011-ல் கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து வதந்தி பரப்பப்படுவதாக, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்...
- திருச்சியில் 408 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த பேருந்து முனையம்...மே மாதம் முதலமைச்சர் திறந்துவைத்த நிலையில், பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு...
- மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு...மாநாட்டு திடலில் சிறப்பு பூஜையுடன் நடைபெற்ற விழாவில், பந்தக்கால் நடப்பட்டது...
- உலக அளவில் உயர் கல்விக்கு சிறந்த நகரங்களின் தரவரிசை பட்டியல்...சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் 4 நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்தன...
- தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே அமித்ஷாவின் வீட்டுக் கதவை தட்டினேன்...அமித்ஷாவை கள்ளத்தனமாக சந்தித்ததாக உதயநிதி முன்வைத்த விமர்சனத்துக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில்...
- உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...முகாமில் மனு கொடுத்தால், தகுதியுள்ள அனைவருக்கும், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என உறுதி..
- குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி...ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...
- நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...
- ஆகஸ்ட் 17ஆம் தேதி டெல்லி வருகிறார் சுபான்ஷு சுக்லா...விண்வெளி பயணத்தின்போது தனக்கு கிடைத்த அனுபவங்களை விவரிப்பார் என தகவல்...
- சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதை, லக்னோவில் இருந்து, நேரலையில் கண்டு கண்கலங்கிய பெற்றோர்...
- டிராகன் வின்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் பத்திரமாக மீட்பு...
- சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா...
Next Story
