காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (12.07.2025)| Thanthi TV

x
  • நேரு எடுத்த தவறான முடிவால் ஜம்மு காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்..
  • இந்தியா மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதாக, சென்னை ஐஐடி விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சு..இதன் காரணமாகவே பாகிஸ்தான் உடனான போரின் போது 9 தீவிரவாதிகளை துல்லியமாக தாக்க முடிந்ததாக பெருமிதம்...
  • கருணாநிதி புத்தக வெளியீட்டு விழாவின்போது ஓல்டு ஸ்டூடண்ட்டுகள் என பேசியது குறித்து ரஜினி விளக்கம்...அரங்கத்தில் எழுந்த சிரிப்பலையால், சீனியர்கள் என்றால் வேர் போன்றவர்கள் என பேச நினைத்ததை மறந்துவிட்டதாக பதில்...
  • வருடாந்திர பராமரிப்பு பணிக்காக பழனி முருகன் கோயில் ரோப்கார் சேவை, வரும் 15ஆம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தம்...வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல‌லாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு...
  • திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...பள்ளி, கல்லூரிகளில் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தால் விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு...
  • வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
  • வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்படாத FASTag கணக்குகள் முடக்கப்படும்...தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எச்சரிக்கை...
  • தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ்...இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால மனுவை திரும்ப பெற்றது பகுஜன் சமாஜ்...
  • தனது வீட்டில், தன் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...யார் வைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக விளக்கம்...
  • 1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1500 ரூபாயை விட்டு விட்டீர்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...அதிமுக ஆட்சிக்கு வந்தால், பெண்கள் மனநிறைவு பெறும் வகையில் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என உறுதி
  • ஈபிஎஸ்-ம், அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...தமிழ்நாடு என்றும் அடி பணியாது.. இது ஓரணி vs டெல்லி அணி என முதல்வர் பதிவு...
  • வேள்பாரி திரைப்படமாக வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பேச்சு...ஓய்வுக்கு பிறகு நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் கருத்து...
  • வாகனங்களின் கண்ணாடிகளில் ஒட்டப்படாத FASTag கணக்குகள் முடக்கப்படும்... தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எச்சரிக்கை...
  • உலகத்தை வலம் வரும் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு ஏன் செல்லாமல் உள்ளார்...?அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கேள்வி...
  • ஈபிஎஸ்-ம், அதிமுகவும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்...தமிழ்நாடு என்றும் அடி பணியாது.. இது ஓரணி vs டெல்லி அணி என முதல்வர் பதிவு...
  • 75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு
  • இரண்டு நாள் பயணமாக வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி...அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரையில் பிரதமர் பங்கேற்பதாக தகவல்
  • தமிழகம் முழுவதும் குரூப் 4 போட்டித் தேர்வு தொடக்கம்...13 லட்சத்து 89 ஆயிரம் தேர்வில் பங்கேற்பு...
  • எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாத‌து குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலம்....ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதிலளித்த‌தும் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தகவல்...
  • ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிப்பு...எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப‌ட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தகவல்...

Next Story

மேலும் செய்திகள்