மதியம்1 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2025) |ThanthiTV

x
  • பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடக்கம்...மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் 485 பேர் கலந்தாய்வில் பங்கேற்பு...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது..
  • பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக நமீபியா நாட்டிற்கு சுற்றுப்பயணம்...
  • குஜராத்தில் மிகவும் பழைமையான ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு...டேங்கர் லாரி அந்தரத்தில் தொங்கியவாறு நின்ற நிலையில் மீட்பு பணி தீவிரம்...
  • கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்த நிமலேஷ் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு...காயமடைந்த நிமலேஷின் சகோதரர் விஷ்வேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...
  • கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக ரயில்வே துறை சார்பில் விசாரணைக் குழு அமைப்பு...முதற்கட்டமாக 13 பேர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்...'
  • நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக, புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்...
  • நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்கான பேருந்து சேவை பாதிப்பு...
  • பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் போராட்டம்...
  • நாடு தழுவிய வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் சீராக இயக்கப்படும் பேருந்துகள்...
  • நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து செங்கல்பட்டில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்...செங்கல்பட்டு - திண்டிவனம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
  • நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்...
  • கல்வி தான் மாணவர்களுக்கு நிலையான சொத்து...மாணவர்கள் ஒருபோதும் கோட்சே வழியில் சென்றுவிடக்கூடாது எனவும் திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு......

Next Story

மேலும் செய்திகள்