மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள்(08.07.2025) | ThanthiTV

• பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து தொடர்பாக, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது... • ரயில் விபத்து நடந்த செம்மங்குப்பத்தில் கடலூர் மாவட்ட எஸ்.பி ஆய்வு.. • ரயில் விபத்து நடந்த செம்மங்குப்பத்தில் கடலூர் ஆட்சியர் நேரில் ஆய்வு... • கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்டுகளில், இந்தி பேசுபவர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு... • பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரயில்வே நிர்வாகம் நிவாரணம்... • ரயில்வே கேட்டை வேன் ஓட்டுநர் திறக்க சொல்லவில்லை என, விபத்தில் காயம் அடைந்த மாணவர் விஷ்வேஷ் பேட்டி... • கடலூர் செம்மங்குப்பம் அருகே விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த மாணவர்களின் புத்தகப் பைகள்... • கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... • கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து... • ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சாருமதி, செழியன் ஆகியோர் அக்கா, தம்பி என அறிவிப்பு... • ரயில் மோதியதில் 50 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட பள்ளி வேன்... • ரயில்வே கேட் திறந்து தான் இருந்ததாக, பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் பேட்டி...
X

Thanthi TV
www.thanthitv.com