காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (13.07.2025) | Thanthi TV

x
  • திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய் தலைமையில், சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..
  • காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய்...
  • தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற குரூப் 4 போட்டித்தேர்வில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 719 பேர் பங்கேற்கவில்லை என டிஎன்பிஎஸ்சி தகவல்..
  • விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை, விமானிகள் மீது பழிபோடும் வகையில் உள்ளதாக விமானிகள் சங்கம் கண்டனம்...
  • அகமதாபாத் விமான விபத்து தொடர்பான முதற்கட்ட அறிக்கை குறித்து தனிப்பட்ட கருத்து தெரிவிக்க விரும்பவில்லை....முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு...
  • விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது, இறுதி அறிக்கையிலேயே தெரியவரும்...மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்...
  • தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்...கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பதில்...
  • தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்...
  • அதிமுக - பாஜக அமைத்துள்ள கூட்டணி, தமிழ்நாட்டை நூறாண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கானது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...
  • பழம்பெரும் தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தனது 83வது வயதில் காலமானார்...
  • திருவள்ளூர் ரயில் தீ விபத்தால் 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் முழுமையாக சேதம்...
  • திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்தில் சிக்கிய நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு...
  • திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோவை, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 8 ரயில்கள் ரத்து
  • திருவள்ளூரில் சரக்கு ரயில் தீ பிடித்து எரிவதால் இரு மார்க்கத்திலும் ரயில் சேவை பாதிப்பு...
  • திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து...தீ கொழுந்து விட்டு எரிவதால், தீயை அணைக்கும் பணி தீவிரம்

Next Story

மேலும் செய்திகள்