மக்கள் முன்னிலையில் திடீரென கண்கலங்கிய திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ
அம்மாவை நினைவு கூர்ந்து கண்கலங்கிய திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ
தனது அம்மாவை நினைவு கூர்ந்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், பொதுமக்கள் முன்னிலையில் கண்கலங்கினார். திருப்பூரில்
பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் முடிவடைந்த திட்ட பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது... அதன் ஒருபகுதியாக கிடாத்துறை புதூரில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் ஆலயமணி வாங்க 2 லட்சம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ், தாயாரை நினைவு கூர்ந்து கண்கலங்கினார். உடனடியாக அருகே இருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
Next Story
