தமிழகத்தையே உலுக்கிய ஏடிஎம் கொள்ளை. வடமாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? -அரியானாவில் பொறி வைத்து பிடித்த போலீஸ்

x
  • பிப்ரவரி 12 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் புகுந்த கொள்ளையர்கள், நள்ளிரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 72 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தின் தொடக்கத்தில் சற்று தடுமாறிய போலீசார், பின்பு டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் சம்பவம் நடைபெற்ற இடங்களில், அந்நேரத்தில் ஆக்டிவாக இருந்த செல்போன் சிக்னல்கள் மற்றும் அழைப்புகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
  • இந்த சம்பவத்தில் நகரில் உள்ள எந்தவொரு சிசிடிவி காட்சியிலும் சிக்காமல் கொள்ளையர்கள் தப்பி சென்றது போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியது.... விசாரணையில் கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு சிசிடிவி இல்லாத அருகில் உள்ள கிராமங்கள் வழியாக தப்பிச்சென்றதாகவும் தகவல் வெளியாகியது.
  • இதையடுத்து, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் மற்றும் ஹரியானா என பல மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர். இதில், கர்நாடகாவின் கோலார் தங்க வயலில் போலீசார் நடத்திய விசாரணை தான் கொள்ளையர்களை ஆட்டம் காண வைத்துள்ளது...
  • ஆரம்பத்திலிருந்தே ஹரியானா மாநிலம் மேவாட் மீது ஒரு கண் வைத்திருந்த போலீசார், அங்கு விசாரணை நடத்துவதில் இருக்கும் சிக்கலையும், சிரமங்களையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது...
  • இந்நிலையில், கர்நாடகாவின் கேஜிஎஃப்பில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் மற்றும் மேலாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஹரியானாவை சேர்ந்த கும்பல் ஒன்று விடுதியில் தங்கியிருந்து திட்டம் தீட்டியதும், கொள்ளையடிக்க உள்ள பகுதிகளை நோட்டமிட்டு வந்ததும் அம்பலமானது.
  • இதனிடையே, கொள்ளையடித்து விட்டு திரும்பிய கும்பல் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் ஹரியானா தப்பிச் சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். உடனே, ஹரியானாவில் முகாமிட்டுள்ள தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹரியானாவில் வைத்து முக்கிய குற்றவாளிகளான முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
  • இருவரையும் விமானம் மூலம் திருவண்ணாமலை அழைத்து வந்த போலீசார், திருவண்ணாமலை நீதித்துறை வளாகத்தில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளிகள் இருவரையும் மார்ச் மூன்றாம் தேதி வரை 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், இருவரையும் வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.
  • பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவத்தில் 10 நாட்களுக்குள் கொள்ளைக்கும்பலின் முக்கிய குற்றாவளிகள் இருவரை போலீசார் கைது செய்த நிலையில், இருவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்தும்...மேலும் பலர் கைது செய்யப்படுவர்களா என்பது பற்றியும்...போலீசாரின் அடுத்த கட்ட நகர்வில் தெரியவரும்.....

Next Story

மேலும் செய்திகள்