அனுமதியின்றி செயல்படும் 162 தனியார் பள்ளிகள்... ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல் - பள்ளிகள் இயக்குநரகத்தின் நடவடிக்கை என்ன?
தமிழகத்தில் சர்வதேச பள்ளி, பன்னாட்டு பள்ளி என பல வகையான பெயர்களில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் பள்ளிகளின் விவரங்களை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் சேகரித்து இருக்கிறது.
இதன்படி, 162 பள்ளிகளின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
அரசின் அனுமதி இல்லாமல் பல தனியார் பள்ளிகள் இயங்குவதாகவும், ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்று விட்டு, பல பள்ளிகளை அங்கீகாரம் இல்லாமல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
162 பள்ளிகள் முறையான அனுமதி இல்லாமல் இயங்கி வருவதாகவும், தனியார் பள்ளிகளின் இந்த முறைகேடுகள் குறித்து கல்வித்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகவும், கூறப்படுகிறது.
Next Story