தமிழ்நாட்டிற்கு ரயில்வே பட்ஜெட் - "காங். ஆட்சியை விட 7 மடங்கு அதிகம் ஒதுக்கீடு" - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
மத்திய பட்ஜெட்டில் ரயில்வேக்கான தொகை குறித்து, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு, காங்கிரஸ் ஆட்சியை விட 7 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது 6 ஆயிரத்து 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வந்தே பாரத் ரயில்களை போல வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர், விரைவில் ஹைட்ரஜன் ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Next Story