போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி பலியான சம்பவம் - தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை

x
  • உதகை அரசு பள்ளியில் கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை யார் அதிக அளவில் விழுங்குவது என்ற போட்டி, 8ஆம் வகுப்பை சேர்ந்த 4 மாணவிகளிடையே ஏற்பட்டுள்ளது.
  • இதில், மாணவிகள் அதிக எண்ணிக்கையில் மாத்திரைகளை விழுங்கியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • இதில், மாணவி ஜைனபா பாத்திமாவின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • சென்னை வரும் வழியில் சேலம் அருகே, திடீரென மாணவிக்கு மூச்சு திணறல் அதிகமாகி சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
  • ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்