"ICC-யில் இருந்து இந்திய அணியை நீக்க வேண்டும்" - கொந்தளித்த பாக். முன்னாள் வீரர்
16 ஆவது ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்க வில்லை என்றால் ஐசிசி குழுவில் இருந்து இந்திய அணியை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்தத் சாடியுள்ளார்.
செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்திய அணி பாகிஸ்தானில் தோல்வியுற்றால் வரும் பின்விளைவுகளை எண்ணி அஞ்சுகிறது எனவும் குழுவில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஐசிசி ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்தினால் பங்கேற்க முடியாது என கூறும் இந்திய அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Next Story