"ரோகித்-கோலிக்கு இடையே அப்போது கருத்து வேறுபாடு?"... "ரவி சாஸ்திரி இருவரையும் அழைத்துப் பேசினார்" - புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர்
2019ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ரோகித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறி உள்ளார்
. 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்குப் பிறகு ரோகித் அணி, கோலி அணி என இந்திய அணி இரு தரப்பாக செயல்பட்டதாக தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக தனது புத்தகத்தில் ஸ்ரீதர் குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்ந்து இருவரையும் அழைத்து அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாகவும், அதன்பிறகு சூழல் சரியானதாகவும் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.
Next Story