ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அண்ணாமலை சந்திப்பு... "ராணுவ வீரர் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வரின் பணி, நம்பிக்கை அளிக்கும்படி இல்லை"- அண்ணாமலை

x
  • கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு தொடர்பாகவும் ஓய்வு பெற்ற ராணுவ வீர்ரகளுடன் சென்று அவர் புகார் அளித்தார்.
  • சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாலை, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் தங்கள் உள்ளக் குமுறல்களை ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
  • கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வரின் பணி நம்பிக்கை அளிக்கும்படியாக இல்லை என்றும் அவர் கூறினார்.
  • தடா பெரியசாமியின் காரை விசிகவினர் சேதப்படுத்தியதற்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளதாகவும், அதை கவனிப்பதாக ஆளுநர் பதிலளித்தார் என்றும் அண்ணாமலை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்