பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் பலியான4 ராணுவ வீரர்களில் இருவர் தமிழர்கள் - வெளியான பேரதிர்ச்சி தகவல்

Published on

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று காலை திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பாதுகாப்பு வீரர்கள் கிரினேடியர் சாகர் பன்னே, கிரினேடியர் கம்லேஷ், யோகேஷ் குமார் மற்றும் சந்தோஷ் நக்ரால் ஆகியோர் உயிரிழந்தனர். இதனை காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி உறுதிப்படுத்தியுள்ளார். பலியானவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. யோகேஷ் குமார், தேனி மாவட்டம் தேவாரம் அருகே மூணாண்பட்டியை சேர்ந்தவர் என்றும், கமலேஷ், சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உடல்கள் இன்று மாலை சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com