நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு - பிரதமர் மோடி இன்று உரை
- நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாடு மற்றும் தூய்மைக் குறித்த, பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய வழி கருத்தரங்கில், பிரதமர் மோடி இன்று உரையாற்ற உள்ளார்.
- மத்திய வீட்டுவசதி துறை, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
- இதில், நகர்ப்புறத் திட்டமிடல் வல்லுநர்கள், நிதி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளனர்.
Next Story