பிரதமர் மோடியின் ஆட்சியை பற்றி கணக்கெடுப்பில் வந்த ரிசல்ட்
பிரதமர் மோடியின் புகழ் குறையாமல் அப்படியே உள்ளதாக, தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தி தெரிவித்துள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று பிரதமர் மோடியின் புகழ், ஆட்சி பற்றி கணக்கெடுப்பு நடத்தியது.
அதில், பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கணக்கெடுக்கப்பட்டவர்களில் பாதி பேர், மோடி பிரதமராக பணியாற்றியதில் மிகவும் திருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
30 சதவிகிதம் பேர் ஓரளவு திருப்தியாக இருப்பதாக கூறியுள்ளனர்.
சமீபத்தில் அதானி குழுமம் மீதான புகார் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அது எந்த விதத்திலும் மோடியின் புகழை பாதிக்கவில்லை என்று தனியார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Next Story