ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று சட்டசபையில் மீண்டும் தாக்கல்

x
  • ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை, இன்று மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.
  • சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை திருப்பி அனுப்பிய ஆளுநர், தமிழக அரசுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என கூறியிருந்தார்.
  • இதையடுத்து, கடந்த 9ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
  • இந்த நிலையில் இன்று நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய உள்ளார்.
  • அதில், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அதற்கு அரசு அளித்த விளக்கங்களும், மசோதாவில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவின் மீது பேரவையில் இன்று விவாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்