தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 25 ஆயிரம் பேர் இன்று பணி ஓய்வு
ஒரே நாளில் 25,000 அரசு ஊழியர்கள் ஓய்வு -காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை...
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 25 ஆயிரம் பேர் இன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, முதல் முறையாக இன்று 25 ஆயிரம் பேர் ஓய்வு பெறுகின்றனர்.
ஏற்கனவே அரசுத் துறைகளில் 3 லட்சத்திற்கும் அதிகமாக காலி பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் கணிசமான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஓய்வு பெறுவதால், மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
Next Story

