கூர் தீட்டிய மிசா.. சீற வைத்த தோல்விகள்.. தீப்பிழம்பாய் எழுந்து குவித்த வெற்றிகள் - நெருப்பாற்றில் நீந்திய முதல்வர் ஸ்டாலின்..!

x
 • மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூன்றாவது மகனாக1953ல் சென்னையில் பிறந்த ஸ்டாலின்,
 • பள்ளிக் கல்வியை சென்னை கிருஸ்த்துவ கல்லூரி உயர்நிலை பள்ளியில் முடித்தார்.
 • விவேகானந்தா கல்லூரியில் பி.யு.சி படித்த பின், 1973ல் சென்னை மாநில கல்லூரியில் வரலாற்று பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
 • பள்ளி மாணவராக இருந்த போது, தன் நண்பர்களுடன் இணைந்து, சென்னை கோபாலபுரத்தில், தி.மு.க இளைஞரணியை சிறிய அளவில் தொடங்கினார்.
 • 1967 நாடாளுமன்ற தேர்தலில், 14 வயதில், தனது மாமா முரசொலி மாறனுக்காக பிரச்சாரம் செய்தார். 1973ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1976ல், அவசர நிலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக, உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 • சிறையில் இருந்த போது அவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
 • சிறையில் இருந்த படியே, தனது இறுதியாண்டு பி.ஏ. தேர்வுகளை எழுதி முடித்தார் ஸ்டாலின்.
 • 1980களில் இரண்டு திரைபடங்களிலும், குறுஞ்சி மலர் என்ற தொலைகாட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
 • 1982ல் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின், அதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார். 1984 சட்டமன்ற தேர்தலில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 • ஆயிரம் விளக்கு பகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட ஸ்டாலின், 1989 தேர்தலில் வெற்றி பெற்றார், 1991ல் தோல்வியடைந்தார். 1996ல் மீண்டும் வெற்றி பெற்றார்.
 • அதே ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநாகராட்சி தேர்தலில் வென்று, சென்னையின் மேயராக பதவியேற்றார்.
 • சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கு ஏரளமான மேம்பாலங்களை உருவாக்கினார்.
 • 2006ல் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலின், 2009ல் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். 2008ல் திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 2016 முதல் 2021 வரை தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக
 • செயல்பட்டார்.
 • 2017ல் திமுகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின், 2018ல் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவராக தேர்ந்தெடுக் கப்பட்டார்.
 • 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றதையடுத்து, தமிழக முதல்வராக பதவியேற்றார்.
 • தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினம், 1953, மார்ச் ஒன்று.

Next Story

மேலும் செய்திகள்