அடையாறு ஆற்றுக்கு வந்த 'காவேரி'.. இன்று தொடங்குகிறது மெட்ரோ 2-ம் கட்ட பணிகள்

x
  • மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ இரயில் பாதைக்காக, அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சென்னை பசுமை வழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்க 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் (tunnel Boring machine) கொண்டு வரப்பட்டுள்ளன.
  • சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்து இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ள நிலையில் சுரங்கம் தோண்டும் பணி இன்று தொடங்குகிறது.
  • இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்திற்கு காவேரி என பெயரிடப்பட்டுள்ளது.
  • 1 கிலோ மீட்டர் நீளம் உள்ள அடையாறு ஆற்றின் அடியில் ஒரு நாளைக்கு 10 மீட்டர் சுரங்கம் தோண்டப்படும் நிலையில், 100 நாட்களுக்குள் ஆற்றின் அடிப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்த பணியை மெட்ரோ நிர்வாக இயக்குனர் சித்திக் ஐ.ஏ.எஸ் மற்றும் மெட்ரோ திட்ட இயக்குனர் அர்ஜுனன் தொடங்கி வைக்கின்றனர்.
  • இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் முதற்கட்டமாக மாதவரத்தில் சுரங்கம் தோன்றும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்