மாரியம்மன் கோயில்...கோடியில் குவிந்த உண்டியல் காணிக்கை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
நிரந்தர உண்டியல்களோடு தைப்பூசத்திற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உண்டியலும் எண்ணப்பட்ட நிலையில், காணிக்கையாக 1 கோடியே 36 லட்சத்து 94 ஆயிரம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3 கிலோ தங்கமும், 4 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
