மீனாட்சி அம்மன் கோவில் அன்னதானம் - மத்திய அரசு வழங்கிய கவுரவம்

x
  • மதுரை மீனாட்சியம்மன் கோயில் அன்னதானம் சுகாதாரமானது என, இந்திய உணவு பாதுகாப்புத்துறை தரச்சான்று வழங்கியுள்ளது
  • இந்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறையால் நியமிக்கப்பட்ட உணவர் என்ற உணவு ஆய்வு நிறுவனம், தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை இணைந்து, மீனாட்சி அம்மன் கோயிலின் சமையல் கூடம் குறித்தும், அங்கு வழங்கப்படும் அன்னதான உணவுகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தன.
  • ஆய்வின் முடிவில், மீனாட்சியம்மன் கோயில் அன்னதான உணவுகள் சுகாதாரமானது என, இந்திய உணவு பாதுகாப்புத் துறை தரச்சான்று வழங்கியுள்ளது.
  • இந்த தரச்சான்று 2025ம் ஆண்டு பிப்ரவரி வரை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 26 கோவில்களுக்கு இந்த தரச்சான்று வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்