எல்.முருகன் மற்றும் அண்ணாமலை திடீர் மன்னார் பயணம்

x

இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மத்தியமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்டத்துக்குச் சென்ற அவர்களுடன் யாழ்ப்பாண துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெய பாஸ்கர், அமைச்சர் காதர் மஸ்தான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் உடன் சென்றனர். அப்போது, தலைமன்னார் கடற்படை முகாம் பகுதிக்குச் சென்று அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சென்று அவர்கள் வழிபட்டனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டதோடு, இந்தியா நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட ஆலய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து, இரு நாட்டு தூதரக ஏற்பாட்டில், மன்னார் மாவட்டத்தில் கணவரை இழந்த பெண்களின் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை அவர்கள் வழங்கினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்