#Breaking : இரும்பு கேட் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரம் - இருவர் கைது
சென்னையில், பிரபல துணிக்கடை வளாகத்தில் இரும்பு கேட் விழுந்து, சிறுமி பலியான சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கீழ்ப்பாக்கம் ஹார்லே சாலையில் உள்ள பிரபல துணிக்கடை நிறுவனத்தில், சங்கர் என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது ஐந்து வயது மகள் ஹரிணி ஸ்ரீ, கட்டட வாயிலில் உள்ள இரும்பு கேட் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.
இதனிடையே, அங்கு பணியாற்றிவரும் காவலாளி கேட்டை மூடியபோது, பக்கவாட்டில் திறக்கும் வசதியுள்ள இரும்பு கேட், திடீரென சிறுமியின் மீது விழுந்தது.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு, காவலாளி சம்பத் மற்றும் துணிக்கடை மேலாளர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .