உலக சாம்ராஜ்யங்களின் தலைவர்களாக இந்தியர்கள்.. இந்தியாவிலிருந்து இன்னொரு CEO - யார் இந்த நீல் மோகன்?

x
  • 49 வயதாகும் நீல் மோகன் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர்.
  • தந்தையுடன் அமெரிக்கா சென்றவர், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜி பிரைன் போன்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். 1996-ல் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.
  • பின்னர் அக்சென்ச்சரில் பணியை தொடங்கியவர், மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து பணியாற்றியவர்.
  • 2015-ல் யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்தவர் இப்போது சி.இ.ஓ. ஆகியிருக்கிறார்.
  • உலகில் கொடிக்கட்டும் நிறுவனங்களை வழிநடத்தும் இந்தியர்கள் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.
  • ஏற்கனவே கூகுள் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார்.
  • மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ.வாக ஆந்திராவை சேர்ந்த சத்யா நாதெல்லா இருக்கிறார். ஐ.பி.எம். தலைமைச் செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணன் உள்ளார்.
  • அடோப் நிறுவன சிஇஓ சாந்தனு நாராயண் வழிநடத்துகிறார்.
  • இணையவழி வீடியோ தளமான விமியோ தலைமை செயல் அதிகாரியாக அஞ்சலி சூட் இருக்கிறார்.
  • ஸ்டார்பக்ஸ் (starbucks) காபி நிறுவன சி.இ.ஓவாக இந்திய வம்சாவளியை சேர்ந்த லஷ்மண் நரசிம்மன் உள்ளார். அமெரிக்காவின் பெட்எக்ஸ் (FedEx ) கொரியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இந்தியர் ராஜ்சுப்ரமணியம் இருக்கிறார்.
  • VMware தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓவாக ரகுராகவன் இருக்கிறார். அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான PALO ALTO தலைமை செயல் அதிகாரியாக நிகேஷ் அரோரா உள்ளார்.
  • NetApp சி.இ.ஓவாக ஜார்ஜ் குரியனும், கூகுள் கிளவுடு தலைமை செயல் அதிகாரியாக தாமஸ் குரியனும், பிரான்சின் சேனல் (CHANEL) குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக லீனா நாயர் உள்ளார்.
  • OGILVY அட்வர்டைசிங் நிறுவன சி.இ.ஓ.வாக பஞ்சாப்பை சேர்ந்த தேவிகா புல்சந்தனி இருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்