இந்தியா - நியூசிலாந்து இடையிலான ODI இன்று தொடக்கம்

இந்தியா - நியூசிலாந்து இடையிலான ODI இன்று தொடக்கம்
x


இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், இன்று தொடங்க உள்ளது.


இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஆடவுள்ளது.

இதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து வென்றது.

இலங்கையை வீழ்த்திய அதே உற்சாகத்துடன் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கவுள்ளது.

விராட் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் சிறந்த ஃபார்மில் இருப்பது, இந்திய அணிக்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால், டாம் தலைமையில் நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்