கடைசி வரை பயத்தை காட்டிய பிராஸ்வெல்... மிரண்டு போய் பார்த்த இந்திய வீரர்கள் - கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ஷர்துல் தாகூர்

கடைசி வரை பயத்தை காட்டிய பிராஸ்வெல்... மிரண்டு போய் பார்த்த இந்திய வீரர்கள் -  கடைசி ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ஷர்துல் தாகூர்
x

19 வயதிற்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.

பெனோனியில் நடைபெற்ற குரூப் டி பிரிவு போட்டியில், இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.

பின்பு விளையாடிய அயர்லாந்து அணி 66 ரன்களுக்கு சுருண்டதால், 83 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் குரூப் டி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்திய மகளிர் அணி, சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.


நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடி முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த சுப்மன் கில், 208 ரன்கள் குவித்தார்.

பின்பு விளையாடிய நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்வரிசையில் களமிறங்கிய பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் இந்திய அணியின் பந்துவீச்சை பதம்பார்த்த நிலையில், பிரேஸ்வெல் அபார சதம் விளாசினார்.

வெற்றிக்காக இறுதிவரை போராடிய இந்திய அணி, நியூசிலாந்து அணியை 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.


ஒருநாள் போட்டிகளில் மிக குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசல், அதிவேகமாக ஆயிரம் ரன்கள் விளாசல் என பல்வேறு சாதனைகளை சுப்மன் கில் படைத்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

23 வயதில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில், சமீபத்தில் 24 வயதில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷனின் சாதனையை முறியடித்தார்.

மேலும் இரட்டை சதம் விளாசிய 5-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் சும்பன் கில் படைத்தார்.

இதுதவிர ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சுப்மன் கில் படைத்துள்ளார்.

19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்த சுப்மன் கில், சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்