இந்தியாவை சுற்றி அதிரவைக்கும் நிலநடுக்கம்.. அதிகாலையிலேயே 4 இடங்களில்.. மக்கள் பீதி

x
  • வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூரிலும் மேகலாயாவில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • இது தொடர்பாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டுள்ள தகவலில், அதிகாலை 2.46 மணியளவில் மணிப்பூரின் நோனி நகரில் ரிக்டர் 3 புள்ளி 2 அளவுகோலில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
  • அதே போல் காலை 6.57 மணியளவில் மேகாலயாவின் தூரா பகுதியில் 3 புள்ளி 7 ரிக்டர் அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை போல் அண்டை நாடுகளான
  • ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • அதிகாலை 4.05 மணியளவில் ஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4 புள்ளி 1 அளவுக்கோலிலும், தஜிகிஸ்தானில் அதிகாலை 5.30 மணியளவில் 4 புள்ளி 3 ரிக்டர் அளவுகோலிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்