இன்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத்துறை எச்சரிக்கை அறிவிப்பு

x
  • இந்த தேர்வுகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகிறார்கள்.
  • இரு மாநிலங்களிலும் 3 ஆயிரத்து 225 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக 3 ஆயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
  • ஆள்மாறாட்டம், காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றி எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது.
  • ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும், காப்பி அடித்தால் மாணவரின் தேர்வை ரத்து செய்வதோடு ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாக இருந்தால் அல்லது, ஊக்கப்படுத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்