குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? - அறிவிப்பை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி

x
  • கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த தேர்வு முடிந்து 7 மாதங்கள் ஆக உள்ள நிலையில், முடிவுகள் வெளியிடாத‌தற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
  • இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., இந்தியாவில் அதிகபட்சமாக 18 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வு என கூறியுள்ளது.
  • 36 லட்சம் விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய வேண்டியுள்ளதாகவும், பணிகள் அதிகம் என்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
  • மேலும், மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்