ஈரோடு இடைத் தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

x

ஈரோடு கிழ க்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

தேமுதிக, நாம் தமிழர், அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும், பாமகவும் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரும் 7-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது.

10-ந் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் மாதம் 2-ந் தேதியும் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்