ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 40 பேரை களமிறக்கும் திமுக

x

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், திமுக சார்பில் 40 பேர் அடங்கிய நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக கொடுத்துள்ளது.

அதில், முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் டி.ஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்