இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டி - உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

x
  • 2வது டி20 போட்டியில் உலக சாம்பியனான இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றி உள்ளது.
  • வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
  • டாக்காவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வெறும் 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
  • வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
  • பின்னர் 118 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய வங்கதேசம், 19வது ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • ஏற்கனவே முதல் டி20 போட்டியில் வென்ற வங்கதேசம், 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி உலக சாம்பியனான இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்