நெருங்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தேர்தல் அதிகாரிகளாக வரப்போவது யாரு..?

x
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் திரைப் பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம் 26-ந்தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, வேட்புமனுக்கள் நாளை 23-ந்தேதி முதல் 26ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 27-ம் தேதி காலை 11.00 மணி முதல் 2-ம் தேதி மாலை மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் 2-ம் தேதி அன்றே வேட்புமனு பரிசீலனையும், 3 முதல் 5-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மார்ச் 5-ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு மார்ச் 26-ம் தேதி காலை வாக்குப்பதிவும், மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்