உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை.யில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு

x

செ ங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகத்தில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வரும் இந்த பல்கலைக்கழகத்தில், போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திடீரென்று வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், எவ்வித குறையுமின்றி அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்