DMK ||| Udhayanidhi Stalin || மூத்த தம்பதிகளுக்கு மேடையில் DCM செய்த நெகிழ்ச்சி செயல்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில், இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ், 2 ஆயிரம் மூத்த தம்பதியினர் சிறப்பு செய்யப்படுகின்றனர். இத்தம்பதியினருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான வேட்டி மற்றும் சட்டை, புடவை, பழ வகைகள், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் மற்றும் சுவாமி படம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
Next Story
