கொரோனா தொற்று எவ்வாறு ஆபத்தானதாக மாறும்? - ஐஐடி ஆராய்ச்சியில் அதிர்ச்சி

x
  • சளி மருந்துகளை பயன்படுத்தினால் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம் என, சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல் வெளியாகி உள்ளது.
  • சென்னை ஐஐடி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், கோவிட் தொற்று எவ்வாறு ஆபத்தானதாக மாறும் என்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில்,
  • இருமல் சிரப்புகள், சளிநீக்க மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வது சளி நீர்த்துளிகள் உருவாவதைக் கட்டுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
  • இதனால், பிறருக்குப் பரவுவதைக் குறைப்பது மட்டுமின்றி, கீழ் சுவாச குழாய்க்கு சளித்துகள்கள் தானாக உள்ளிழுக்காமல் தவிர்க்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • பாதிக்கப்பட்ட சளித் துளிகள் சுவாசப் பாதையின் ஊடாக பயணிப்பது முக்கிய பங்கு வகிப்பதுடன், பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப நோய்த்தொற்றின் வளர்ச்சியும் தீவிரமும் இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
  • ஆய்வின் மூலம் தும்மல் மற்றும் இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் மூக்கு, தொண்டையில் பாதிக்கப்பட்ட சளித்துளிகள் உருவாவதைத் தடுப்பதுடன், நுரையீரலின் ஆழமான பகுதிக்குள் அவை நுழைந்து பரவாமல் தடுக்க உதவும் எனவும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்