வேகமெடுக்கும் கொரோனா பி.எப் 7 பரவல் - மத்திய அரசு விதித்த அதிரடி கட்டுபாடு

x

சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100 சதவிகித கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளில் அதிகரித்து வருகிறது.

இந்த நாடுகளில் இருந்து பயணிகள் வரும் பொழுது 72 நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நெகட்டிவ் என்ற சான்றிதழ் கட்டாயம்என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வந்ததும் 2 சதவிகிதம் ரேண்டம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், இதனை ஏர்சுவிதா என்ற இணையத்தில், விவரத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இந்தியா வந்தாலும் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்