துறை செயலாளர்களுடன் 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..


அரசாணையில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர் செயலராக மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் நியமிக்கப்பட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் அலுவல் சார் உறுப்பினர்களாக மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாகவும்,

மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து அவர்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்திலும் கொள்கைகளை வகுப்பதில் உறுதுணையாகவும் செயல்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது கீழ்கண்ட பணிகளையும் மேற்கொள்ளும்:

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கொள்கைகள், செயல்முறைத் திட்டங்கள், சட்ட முன்வரைவுகள் மற்றும் திட்டங்களை வகுப்பதில் ஆலோசனைகளை வழங்குதலை இந்தக் குழு மேற்கொள்ளும்


Next Story

மேலும் செய்திகள்