சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. உயிர் தப்பிய 324 பயணிகள்...

x
  • சென்னையில் இருந்து கத்தாருக்கு புறப்பட இருந்த விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக, அவசரமாக ஓடு பாதையில் நிறுத்தப்பட்டது.
  • சென்னை விமான நிலையத்தில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு 336 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த விமானம், நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்ற போது, இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
  • பின்னர், அவசரமாக ஓடு பாதையில் நிறுத்திய விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
  • இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
  • தொடர்ந்து, விமான பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், மாலை வரை சரி செய்யப்படாததால், விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் ஏற்றி சொல்லப்பட்டு, பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்