இனி சென்னையில் ஒரே டிக்கெட்டில் ,பஸ், ரயில்,மெட்ரோவில் பயணிக்கலாம்

x
  • சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.
  • சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படு`த்த, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை எடுத்து வந்தது.
  • இந்தநிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
  • ஒரே டிக்கெட் முறையை சென்னையில் நடைமுறைபடுத்துவதற்காக மத்திய அரசின் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்யூட்டிங் (CENTRE FOR DEVELOPMENT OF ADVANCED COMPUTING) நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
  • இதனையொட்டி ஒரே டிக்கெட் முறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்