சென்னையில் மிதமான மழை.. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

x

சென்னை எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்